கேரள மருத்துவர்களின் அசத்தலான நடனம்… கொரோனாவிற்கு மத்தியில் இந்த நடனம் எதற்காக தெரியுமா?

 கேரள மருத்துவர்களின் அசத்தலான நடனம்… கொரோனாவிற்கு மத்தியில் இந்த நடனம் எதற்காக தெரியுமா?

கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, கேரள பெண் மருத்துவர்கள் சேர்ந்து வெளியிட்ட நடன வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்குதல் கேரளாவை விட்டுவைக்காத நிலையில், அங்கு அரசு தீவிரமாக மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக, தற்போது பெருமளவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.

அங்கு தற்போது 173 பேருக்கு மட்டுமே தொ ற்று உள்ளது. அவர்கள் விரைவில் குணம் அடைந்து விடுவார்கள் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் எஸ்.கே. மருத்துமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர்கள், பக்திப் பாடலுக்கு அசத்தலாக நடனத்தை வடிவமைத்துள்ளனர். கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் பணியாற்றுவோருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இந்த நடனத்தை அவர்கள் அமைத்துள்ளார்கள்.

கேரளாவில் பிரபலமான ‘லோகம் முழுவன் சுகம் பகரன்’ என்ற பாடலுக்கு 24 பெண் மருத்துவர்கள் நடனமாடியுள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து கேரளா படிப்படியாக மீண்டு வரும் சூழலில் மருத்துவர்கள் நடன வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

Related post