நடிகர் விஜயின் அடுத்த அதிரடி !! வங்கிக் கணக்குகளில் பணம் அனுப்பி இன்ப அதிர்ச்சி !!

 நடிகர் விஜயின் அடுத்த அதிரடி !! வங்கிக் கணக்குகளில் பணம் அனுப்பி இன்ப அதிர்ச்சி !!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்த வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றன.

இதற்காக அரசுக்கு நிதியுதவி அளிக்குமாறு, பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் மக்களிடம் கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முதல்வர் மற்றும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் 1.30 கோடி நிதியுதவி அளித்திருந்தார்.

மத்திய சென்னை விஜய் நற்பணி மன்றத் தலைவர் பூக்கடை குமாரிடம் அவருடைய ஏரியாவில் கஷ்டப்படும் ரசிகர்களின் லிஸ்டை எடுத்துக் கொடுத்துள்ளார்.  மோகன் என்கிற இளைஞர் மிகவும் கஷ்டப்படுவதாகவும், அவருடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை விஜய்க்கு அனுப்பி வைத்துள்ளார்.

மோகனின் வங்கிக் கணக்கிற்கு ‘விஜய் அறக்கட்டளை’ வங்கிக் கணக்கிலிருந்து 10,000 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.அடுத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குச் சாப்பாடு, அத்தியாவசியப் பொருட்களை தனது மக்கள் மன்றம் மூலமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

Vijay At The ‘Master’ Audio Launch

யாரும் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் என்றும், மாநிலத் தலைவர்கள் மூலமாக என்ன செலவு என்று கூறினால் அதை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்பி வைக்கிறேன் என வாக்குறுதி அளித்திருக்கிறாராம் விஜய்.

Related post