ஒரே வாந்தி !!திடீரென நாற்றம் !!அதிகாலையில் நடந்த துயரத்தின் கொடுமைகள் இதோ !!

 ஒரே வாந்தி !!திடீரென நாற்றம் !!அதிகாலையில் நடந்த துயரத்தின் கொடுமைகள் இதோ !!

விசாகப்பட்டினம் கோபால்பட்டினத்தில் உள்ள வேங்கடாபுரம் கிராமத்தில் இருக்கும் எல்.ஜி.பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து ஸ்டைரீன் விஷவாயுக் கசிவு ஏற்பட்டதில் இதுவரையிலும் சுமார் 10 பேர் பலியாகியுள்ளனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் ஒருவர் கூறுகையில், காலையில் எழுந்த போது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, அனைவரும் ஓடிக் கொண்டிருநதனர்.நாங்களும் வீட்டை விட்டு வெளியே வந்த போது நினைவிழந்தோம், ஒழுங்காக பேசக்கூட முடியவில்லை.

மற்றும் என்னுடைய குழந்தைகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது, தற்போது அவர்கள் மீண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மற்றொரு நபர், ஊரெங்கும் வீசிய துர்நாற்றத்தால் வாந்தி ஏற்பட்டது, அனைவரும் சாலையிலேயே மயங்கி விழுந்தனர், மருத்துவமனையில் கண்விழித்தோம் என தெரிவித்துள்ளார்.

அதிகாலையில் நடந்த இந்த துயர சம்பவத்தால் மக்கள் பரிதவித்து நிற்கின்றனர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி அறிவித்துள்ளார்.

 

Related post