Honda Cars offers | ஹோண்டா கார்களுக்கு பம்பர் தள்ளுபடி

ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது மாடல்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதன்படி ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா தனது ஐந்து மாடல்களுக்கு ரூ.27,500 வரை தள்ளுபடி வழங்குகிறது. ஆகஸ்ட் மாதத்தில் தள்ளுபடி விலையில் வாங்கக்கூடிய ஹோண்டா கார்களில் ஐந்தாம் தலைமுறை சிட்டி மற்றும் நான்காம் தலைமுறை மாடல், அமேஸ் சப்-காம்பாக்ட் செடான், ஜாஸ் ஹேட்ச்பேக் மற்றும் டபிள்யூஆர்-வி சப்காம்பாக்ட் எஸ்யூவி ஆகியவை அடங்கும். அதேசமயம் ஹைப்ரிட் சிட்டி இ:எச்.இ.வி செடானை இந்த மாதமும் தள்ளுபடி பட்டியலில் இருந்து விலக்கி வைத்துள்ளது ஹோண்டா நிறுவனம். மற்ற மாடல்களின் வழங்கப்படும் தள்ளுபடிகள் இந்த மாத இறுதி வரை கிடைக்கும். 

ஹோண்டா சிட்டி (5வது தலைமுறை)
ஹோண்டா கார்கள் அதன் ஐந்தாவது தலைமுறை சிட்டி மிட்-சைஸ் செடானில் ரூ.27,496 வரையிலான தள்ளுபடிகளை வழங்குகிறது. இந்தச் சலுகையின் கீழ், ஹோண்டா சிட்டியின் ஐந்தாம் தலைமுறை மாடல் ஆகஸ்ட் மாதத்தில் வாங்குவதற்கு ரூ. 5,000 வரை ரொக்கத் தள்ளுபடி அல்லது ரூ. 5,496 மதிப்புள்ள இலவச ஆக்சஸெரீகளைப் பெறுகிறது. இது தவிர, சிட்டியின் ஐந்தாம் தலைமுறை மாடலில் ரூ.5,000 கார் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பெறலாம். ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 கூடுதல் லாயல்டி போனஸும் உள்ளது. அத்துடன் இதில் ரூ.7,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். 

மேலும் படிக்க | லைசென்ஸ் இல்லாமல் ஓட்டக்கூடிய வாகனங்களின் பட்டியல்

ஹோண்டா டபிள்யூஆர்-வி
ஆகஸ்ட் மாதத்தில் சிட்டியின் ஐந்தாவது தலைமுறைக்குப் பிறகு, ஜப்பானிய கார் தயாரிப்பாளர் அதன் சப்-காம்பாக்ட் எஸ்யூவி ஹோண்டா டபிள்யூஆர்-வியில் அதிகபட்சமாக ரூ.27,000 வரை பலன்களை வழங்குகிறது. ஆகஸ்ட் மாதம் டபிள்யூஆர்-வி ஆனது ரூ. 10,000 மதிப்புள்ள கார் எக்ஸ்சேஞ்ச் அல்லது ரூ. 5,000 கார்ப்பரேட் தள்ளுபடியை உள்ளடக்கியது. ஹோண்டா தனது பழைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 லாயல்டி போனஸையும் வழங்குகிறது. மற்ற வாடிக்கையாளர்களுக்கு, 7,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸும் உண்டு.

ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 2020
நாட்டில் உள்ள ஹோண்டாவிடமிருந்து தற்போதுள்ள ஒரே ஹேட்ச்பேக் மாடலான ஹோண்டா ஜாஸ் ஆகஸ்ட் மாதத்தில் மற்ற கார்களில் மூன்றாவது அதிக பலனைப் பெறுகிறது. ஹோண்டா ஜாஸின் ஒட்டுமொத்த தள்ளுபடியான ரூ.25,000, ரூ.10,000 கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 லாயல்டி போனஸ் ஆகியவை அடங்கும். ஜாஸ் காருக்கு கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.7,000 மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.3,000 ஆகியவையும் வழங்கப்படுகிறது. 

ஹோண்டா அமேஸ்
ஹோண்டாவின் ஃபிளாக்ஷிப் சப்காம்பாக்ட் செடான் ஹோண்டா அமேஸ் (ஹோண்டா அமேஸ்) இம்மாதம் மொத்தம் ரூ.8,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதில் ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 லாயல்டி போனஸ் அடங்கும். இதனுடன், கார் எக்ஸ்சேஞ்ச் போனஸின் கீழ் 3,000 ரூபாய் நன்மையையும் நிறுவனம் வழங்குகிறது.

ஹோண்டா சிட்டி (4வது தலைமுறை)
ஹோண்டாவின் ஃபிளாக்ஷிப் செடானின் பழைய பதிப்பு லாயல்டி போனஸாக ரூ.5,000 தள்ளுபடியில் கிடைக்கிறது. கார் தயாரிப்பாளர் இந்த காருக்கு வேறு எந்த தள்ளுபடியையும் வழங்கவில்லை.

மேலும் படிக்க | அடுத்த மாதம் இந்திய சாலைகளில் களமிறங்கும் TVS க்ரூசியர் இரு சக்கர வாகனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published.